சித்தா தோன்றிய விதம்

ஆதி மனிதர்கள் உணவிற்காக கிழங்குகளையும் , பழங்களையும் பயன்படுத்திதான் உயிர் வாழ்ந்திருக்க முடியும் அதே போல் தனது நோய்களுக்கும் மருந்தாக பச்சை இலைகளையும், வேர்களையும் பயன்படுத்தியிருப்பர்.
மருத்துவ அறிவியல் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து செடி, கொடி,மரங்கள் மருத்துவ பயன் உடையவை தான். ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு நோயை தீர்க்கும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் உண்டு எனலாம். ஏதாவது ஒரு தாவரத்திற்கு மருத்துவ குணம் இல்லை என சொன்னால் அந்த தாவரத்தை முறைப்படி அறிவியல் ஆய்வு செய்யவில்லை என்று தான் அர்த்தம் . ஒரு மூலிகையின் வேர். தண்டு, இலை. பட்டை, தட்டை, மலர், கனி, விதை ஆகி அனைத்து பாகங்களிலும் மருத்துவக் குணமுடையதாகும்.
உலகிலேயே மிக பழமை வாய்ந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என கருதப்பட்டு வருகிறது . சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவம் . சித்த மருத்துவம் தமிழர் நாகரிகத்துடன் ஒன்றியது மட்டுமல்லாமல் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய மருத்துவம் சித்த மருத்துவம் எனக் கூறலாம்.
அம்மருத்துவத்தை தோற்றுவித்தவர்கள் சித்தர்கள் என்பதால் சித்த மருத்துவம் என பெயர் பெற்றது. சித்தர்கள் சாதரணமான சக்தியைவிட சிறப்புமிக்க மனித சக்தி பெற்றவர்களாகவும், உள்ளுணர்வு மிகுந்தவர்களாகவும் இருந்து தங்களது ஞான அறிவாலும், அனுபவத்தாலும் சித்த மருத்துவம் பற்றி ஏடுகளில் பல நூறு சித்தர்கள் எழுதி வைத்துள்ளனர். அது மட்டுமன்றி, மனித நேயத்திற்காக ஏடுகள் அழியாமல் பாதுகாத்து நிலைநாட்டியுள்ளனர். பதினென் சித்தர்கள் சித்த மருத்துவத்தை போற்றி, பாதுகாத்து வந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.பதினென் சித்தர்களில் முதலானவர் எனக் கருதப்படும் அகத்தியர் தன்னுடைய அகத்தியகுணவாகடம் எனும் நூலில் மூலிகைகளின் மருந்துபயன் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதுபோல் திருமூலர் அவரது நூலான திருமந்திரத்தில் பல காயகற்ப மூலிகைகளின் இயல்புகள் பற்றி எழுதியுள்ளார். அது போல் தன்வந்திரி வடநாட்டவர் தான் என்றாலும் தமிழில் எழுதியுள்ள தன்வந்திரி நிகண்டில் மூலிகை மகத்துவத்தை விளக்கியுள்ளார்.மூலிகை மன்னர் என கருதப்படும் சித்தர் தேரன் மூலிகைகளை பயன்படுத்தி செய்யும் மருந்து வகைகளை தேரையர் யமக வெண்பா எனும் நூலில் விளக்கியுள்ளார்5000 ஆண்டுகளுக்கு முன்பாக பழனியில் வாழ்ந்தவராக கருதப்படுபவர் போகர். போகர் நிகண்டு எனும் நூலில் 1444 மூலிகைகள் பற்றிய செய்திகளை கொடுத்துள்ளது மட்டுமல்லாமல், நவபாசணங்களிலிருந்தும், மூலிகைகளிலிருந்தும் உருவாகியுள்ள நவபாசான கட்டு எனும் பழனி மூலவர் சிலை தற்கால மக்களுக்கு இன்று வரை மருத்துவ சக்தி கொண்டதாக கருதப்பட்டு வருகிறது.அதாவது நோய் வராமல் தடுக்க, மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியுடைய மூலிகை மருந்துகள் சித்த மருத்துவத்தில்தான் உள்ளன.